TwitterFacebook

மீண்டும் இணைகிறது பாண்டிய நாடு ஜோடி

மீண்டும் இணைகிறது பாண்டிய நாடு ஜோடி

Tuesday 02 Dec 2014

சுந்தர் சி இயக்கத்தில் தற்போது பிசியாக நடித்து வரும் விஷால், அடுத்து சுசீந்திரன் இயக்கத்தில் நடிக்கவிருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது. சுசீந்திரன் ஏற்கனவே விஷாலின் “பாண்டியநாடு” என்ற ஹிட் படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

விஷால்-சுசீந்திரன் மீண்டும் இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தொடங்கவுள்ளதாகவும், பிப்ரவரியில் இந்த படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகும் என்றும் கூறப்படுகிறது. நாயகி உள்பட இந்த படத்தில் பணிபுரியும் தொழில்நுட்ப கலைஞர்களின் தேர்வு நடந்து வருகிறது.

சுசீந்திரன் படத்தை முடித்த பின்னர் விஷால், லிங்குசாமியின் படத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இந்த படம் விஷால் நடிப்பில் லிங்குசாமி இயக்கிய சண்டக்கோழி படத்தின் இரண்டாம் பாகமாக இருக்கும் என கூறப்படுகிறது. இந்நிலையில் விஷால் நடிப்பில் மிக வேகமாக வளர்ந்து வரும் “ஆம்பள” படத்தின் ‘பழகிக்கலாம்’ என்ற பாடல் இன்று ரிலீஸ் ஆகியுள்ளது. இந்த பாடலுக்கு ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையமைத்துள்ளார்.

பிரான்ஸ் நாட்டில் விஜய்யை தோற்கடித்த ரஜினி

பிரான்ஸ் நாட்டில் விஜய்யை தோற்கடித்த ரஜினி

Monday 01 Dec 2014

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான ‘லிங்கா’, அவரது பிறந்த நாளான டிசம்பர் 12ஆம் தேதி உலகம் முழுவதும் சுமார் 5000க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் வெளியாகயிருப்பது உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், இதுவரை இல்லாத அளவில் மிக அதிக தியேட்டர்களில் பிரான்ஸ் நாட்டிலும் லிங்கா வெளியாகவுள்ளது.

பிரான்ஸில் தற்போது கிடைத்துள்ள தகவலின்படி மொத்தம் 45 தியேட்டர்களில் லிங்கா வெளியாகிறது. அதே நாளில் வெளியாக்கும் ஒரு பிரெஞ்ச் படத்திற்கு சமமாக அந்த நாட்டில் லிங்கா விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. லிங்கா படத்தின் பிரெஞ்ச் மொழி போஸ்டர்கள் பல இடங்களில் ஒட்டப்பட்டிருப்பதாக சமூக வலைத்தளங்களின் மூலம் செய்திகள் வெளியாகி வருகின்றது.

இதற்கு முன்னாள் விஜய் நடித்த ‘கத்தி’ பிரான்ஸ் நாட்டில் 25 தியேட்டர்களில் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது. நேற்று கோவையில் கத்தியின் சாதனையை லிங்கா முறியடித்தது என்பதை பார்த்தோம். தற்போது அதே கத்தி பிரான்ஸ் நாட்டில் ஏற்படுத்திய சாதனையை லிங்கா முறியடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

‘திகார்’ ஆடியோ விழாவில் கிரண்பேடி, வ.உ.சி. பேரன்

‘திகார்’ ஆடியோ விழாவில் கிரண்பேடி, வ.உ.சி. பேரன்

Thursday 27.11.2014

திருப்பாச்சி, சிவகாசி, திருப்பதி, தர்மபுரி போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் பேரரசு இயக்கியுள்ள ‘திகார்’ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் படத்தின் நாயகன் பார்த்திபன் உள்பட படக்குழுவினர் அனைவரும் கலந்துகொண்டனர்.

திகார் படத்தின் பாடல் சிடியை திகார் ஜெயில் புகழ் கிரண்பேடி ஐ.பி.எஸ் வெளியிட அதை வ.உ.சி பேரன் சி.வ.சிதம்பரம் அவர்கள் பெற்றுக்கொண்டார்.

வழக்கமாக தனது படங்களில் அம்மா, தங்கை செண்டிமெண்ட் இருக்கும் என்றும், ஆனால் இந்த படத்தில் முதன்முதலாக அப்பா-மகன் செண்டிமெண்ட் உள்ளது என்றும் இயக்குனர் பேரரசு கூறியுள்ளார். இந்த படத்தில் எட்டு அதிரடி சண்டைக்காட்சிகள் இருப்பதாவும், படத்தில் ஜியாத்கான் என்ற வில்லனை அறிமுகப்படுத்தியுள்ளதாகவும் பேரரசு கூறினார்.

ஷபீர் இசையமைத்துள்ள இந்த படத்திற்கு சேகர்.வி.ஜோசப் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படத்தை காயத்ரி பிலிம்ஸ் இண்டர்நேஷனல் பட நிறுவனம் சார்பாக ரேகா அஜ்மல் தயாரித்துள்ளார். பேரரசு கடைசியாக கடந்த 2012ஆம் ஆண்டு திருத்தணி என்ற படத்தை இயக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

யட்சன் படப்பிடிப்பில் நடிகர் கிருஷ்ணா படுகாயம்

யட்சன் படப்பிடிப்பில் நடிகர் கிருஷ்ணா படுகாயம்

Wednesday 26 Nov 2014

இளையதலைமுறை நாயகர்களில் நல்ல வளர்ச்சியை அடைந்து வரும் நடிகர் கிருஷ்ணா நடித்து சமீபத்தில் வெளியான ‘வன்மம்’ திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் நடிகர் கிருஷ்ணாவுக்கு படப்பிடிப்பின்போது ஒரு விபத்து ஏற்பட்டதாகவும், அதில் அவர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.

ஆர்யாவுடன் “யட்சன்” என்ற படத்தில் நடித்து வரும் கிருஷ்ணா, படப்பிடிப்பின்போது ஏற்பட்ட காயத்தால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதாக உறுதியான தகவல்கள் கூறுகின்றன. இருப்பினும் அவர் வலி நிவாரணி மருந்தை உட்கொண்டு படப்பிடிப்பில் தொடர்ந்து நடித்து ஒத்துழைப்பு கொடுத்துள்ளதாக தெரிகிறது.

கிருஷ்ணா தற்போது யட்சன் படத்தை அடுத்து விழித்திரு, யாக்கை ஆகிய படங்களில் நடித்து  வருகிறார். தற்போது அவர் விழித்திரு படத்திற்காக சென்னை அருகேயுள்ள ஒரு தீம் பார்க்கில் நடித்து வருகிறார்…

அஜித்தும், அனோஷ்காவும் கணக்கு பார்ப்பதே இல்லை. ஷாலினி

அஜித்தும், அனோஷ்காவும் கணக்கு பார்ப்பதே இல்லை. ஷாலினி

Tuesday 25 Nov 2014

அஜீத் நடித்த ‘என்னை அறிந்தால்’ திரைப்படம் வரும் பொங்கல் திருநாளில் ரிலீஸாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் சமீபத்தில் அஜீத் மனைவி ஷாலினி அஜீத் பிரபல பத்திரிகை ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அந்த பேட்டியில் தங்கள் மகள் அனோஷ்கா குறித்து அவர் பல விஷயங்களை மனம் திறந்து கூறியுள்ளார்.

அஜீத்துக்கு வீட்டுக்கு வரும் விருந்தாளிகளை இன்முகத்துடன் வரவேற்கும் குணம் இயற்கையிலேயே உண்டு என்றும், அதே குணம் எங்கள் மகளுக்கும் இருக்கவேண்டும் என்பதில் அவர் மிகவும் கவனமாக இருந்தார். வீட்டுக்கு யார் வந்தாலும், அனோஷ்கா ‘வாங்க அங்கிள், வாங்க ஆன்ட்டி’ன்னு கூப்பிட்டு நலம் விசாரிப்பா. பிறரை மதிக்கும் பழக்கத்தை முதலில் குழந்தைகளிடத்தில் இருக்க வேண்டும் என்பதில் நாங்கள் இருவரும் மிகவும் உறுதியாக இருந்தோம்.

மேலும் அனோஷ்காவுக்கு சின்ன வயதில் இருந்தே ஆரோக்கியமான உணவுப்பழக்கத்தை கற்றுத்தந்துள்ளோம். மேலும் மத்தவங்களுக்கு உதவுவதில் அஜீத் கணக்கு பார்த்ததே இல்லை. இந்த அபூர்வ குணம் அப்படியே அனோஷ்காவிடம் இயற்கையாகவே உள்ளதை எண்ணி தான் மிகவும் பெருமைப்படுவதாக ஷாலினி அஜீத் கூறியுள்ளார்.

ரஜினியின் லிங்கா 200வது படம். யாருக்கு?

ரஜினியின் லிங்கா 200வது படம். யாருக்கு?

2014ஆம் ஆண்டு தொடங்கியதில் இருந்து இதுவரை 189 தமிழ் திரைப்படங்கள் ரிலீஸ் ஆகியுள்ளது. இந்நிலையில் திட்டமிட்டபடி லிங்கா திரைப்படம் டிசம்பர் 12ல் ரிலீஸானால் அந்த படம் இவ்வருடம் ரிலீஸாகும் 200வது படம் என்ற பெருமையை பெற வாய்ப்பு உள்ளது.

இன்று வெளியாகிற ஐந்து படங்களுடன் சேர்த்து இவ்வருடம் மொத்தம் 189 திரைப்படங்கள் ரிலீஸ் ஆகியுள்ளது. இந்நிலையில் டிசம்பர் 12ஆம் தேதிக்கு முன்னர் இன்னும் இரண்டு வெள்ளிக்கிழமை இருக்கின்றது. அந்த இரண்டு தினங்களிலும் பத்து திரைப்படங்கள் வரை ரிலீஸாக தயார் நிலையில் உள்ளது.

இதனால் டிசம்பர் 12 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் ரஜினியின் லிங்கா, இவ்வருடத்தின் 200வது படம் என்ற பெருமையை அடைய இருக்கின்றது. லிங்கா திரைப்படத்தின் ரிலீஸ் தேதி ரஜினியின் பிறந்த நாள் என்பதும் இந்த படம் அவருக்கு 167வது படம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஸ்ரீதிவ்யா மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார்

ஸ்ரீதிவ்யா மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார்

வருத்தப்படாத வாலிபர் சங்கம், ஜீவா ஆகிய படங்களை அடுத்து நடிகை ஸ்ரீதிவ்யாவுக்கு கோலிவுட்டில் வாய்ப்புகள் பெருகிக்கொண்டே போகிறது. முதல் படத்தில் சில லட்சங்களில் ஆரம்பித்த அவரது சம்பளம் தற்போது பலமடங்கு உயர்ந்துள்ளது. தற்போது அவர் சிவகார்த்திகேயனோடு காக்கி சட்டை, ஜி.வி.பிரகாஷுடன் பென்சில், விக்ரம் பிரபுவுடன் வெள்ளைக்கார துரை, மற்றும் அதர்வாவுடன் ஈட்டி ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

தற்போது ஸ்ரீதிவ்யாவின் மார்க்கெட் உயர்ந்துள்ளதை அடுத்து ஸ்ரீதிவ்யா நடித்து முடிக்கப்படாமல் கிடப்பில் போட்ட நகர்ப்புறம், காட்டு மல்லி ஆகிய இரண்டு படங்களையும் அதன் தயாரிப்பாளர்கள் தூசி தட்டி மீண்டும் படப்பிடிப்பை தொடங்க முடிவு செய்துள்ளனர். ஆனால் ஸ்ரீதிவ்யாவிடம் கால்ஷீட் கேட்கும்போதெல்லாம் தன்னிடம் இப்போது கைவசம் காஷீட் தேதிகள் இல்லை என்று கூறி கால்ஷீட் கொடுக்க ஸ்ரீதிவ்யா மறுத்து வருகிறாராம்.

இதனால் இந்த இரண்டு தயாரிப்பாளர்களூம் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புகார் கொடுக்க முடிவு செய்துள்ளனர். விரைவில் இந்த பிரச்சனைக்கு தீர்வு ஏற்படும் என தாங்கள் நம்புவதாக அவர்கள் கூறி வருகின்றனர்.

மருதநாயகத்தை எப்போது வேண்டுமானாலும் எடுப்பேன்- கமல்ஹாஸன்

மருதநாயகத்தை எப்போது வேண்டுமானாலும் எடுப்பேன்- கமல்ஹாஸன்

Tuesday 18 Nov 2014

கமலஹாசன் நடித்து ரிலீசுக்கு தயாராக விஸ்வரூபம் 2, உத்தம வில்லன் மற்றும் பாபநாசம் ஆகிய மூன்று படங்கள் உள்ளன. இதில் உத்தம வில்லன் படம் விரைவில் ரிலீசாக உள்ளது. அடுத்து திப்பு சுல்தான் வாழ்க்கை வரலாற்றைப் படமாக்கப் போவதாக கமல் அறிவித்துள்ளார். இந்த நிலையில் கமலஹாசனின் லட்சிய படமான மருதநாயகம் படப்பிடிப்பு மீண்டும் துவங்கப்படலாம் என பேச்சு அடிபடுகிறது.

மருதநாயகம்

இது குறித்து கமலஹாசன் சமீபத்தில் அளித்த பேட்டியில், “மருதநாயகம் படத்தை எடுக்க பணம் மட்டும் தேவையானதாக இல்லை.

உலகளாவிய விநியோகம்

உலகளாவிய வலுவான விநியோகமும் வேண்டும். ஆங்கிலம், பிரெஞ்ச், தமிழ், மொழிகளில் இப்படம் எடுக்கப்படுவதால் அனைத்து பகுதிகளிலும் சரியான முறையில் ரிலீஸ் செய்ய வேண்டியது முக்கியம்.

30 நிமிடக் காட்சிகள்

எனவே அதற்கான சூழ்நிலைகள் அமைந்தால் படத்தை எடுப்பேன். ஏற்கனவே இந்த படத்துக்கான 30 நிமிட காட்சிகள் முடிக்கப்பட்டு விட்டன. மீதி 2 மணி நேர காட்சிகள் எடுக்கப்பட வேண்டும். அதை எப்போது வேண்டுமானாலும் எடுப்பேன்,” என்று கூறியுள்ளார்.

ராணி எலிசபெத்

மருதநாயகம் படத்தை சில ஆண்டுகளுக்கு முன்பு அப்போதைய பிரிட்டிஷ் மகாராணி இரண்டாம் எலிசபெத், முதல்வர் கருணாநிதி, ரஜினிகாந்த் முன்னிலையில் தொடங்கினார் கமல். இந்தப் படத்துக்காக உருவாக்கப்பட்ட ட்ரைலர் காட்சியும் அதற்கு இளையராஜா அமைத்த பின்னணி இசையும் மிகவும் பேசப்பட்டன.

 

லிங்கா இசை விமர்சனம்

லிங்கா இசை விமர்சனம்

Monday 17 Nov 2104

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கே.எஸ்.ரவிகுமார் இயக்கிய ‘லிங்கா’ திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா  நேற்று சிறப்பாக நடைபெற்றது . இந்த படத்தின் பாடல் ஐடியூனில் இன்று அதிகாலை 12 மணிக்கு வெளியாகி ஆயிரக்கணக்கானோர் டவுன்லோடு செய்துகொண்டு வருகின்றனர். சூப்பர் ஸ்டார் படத்திற்கு இசையமைத்த ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மானின் பாடல்கள் குறித்து தற்போது பார்ப்போம்.

லிங்கா இசை வெளியீட்டு விழா

1.ஓ நண்பா என தொடங்கு ரஜினியின் அறிமுகப்பாடல். வழக்கம்போலவே இந்த பாடலை எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பாடியுள்ளார். அவருடன் ஆர்யன் தினேஷ் கங்காரத்தினமும் பாடியுள்ளார். ரஜினி ரசிகர்களின் எண்ண ஓட்டத்தை நன்கு புரிந்துகொண்டு அவர்களுக்கேற்றவாறு இசையமைத்துள்ளார் இசைப்புயல். ‘வானம் வலது கையில், பூமி இடது கையில் வாழ்வே நமது பையில்’ என்ற வைரமுத்துவின் வார்த்தைகள் நம்பிக்கையின் உச்சம்.

2. என் மன்னவனே என தொடங்கும் கவிஞர் வைரமுத்துவின் பாடல். ஆதித்தி பால் மற்றும் ஸ்ரீனிவாஸ் பாடிய இந்த பாடல் ஒரு டூயட் பாடல். ரொம்ப சிம்பிளாகவும் அதே நேரத்தில் பிரமாதமாகவும் இசையமைத்துள்ளார். வைரமுத்துவின் ஆழமான வரிகள் சுண்டி இழுக்கின்றன. குறிப்பாக ‘நூறு யானைகளின் தந்தம் கொண்ட ஒரு கவசம் மார்பில் அணிந்தாய், கலசம் கொண்ட அந்த கவசம் உடைத்து மார்பில் நான் புகுந்தேனே’ என்ற வரியின் ஆழம் மிக அருமை.

3 இந்தியனே வா..புது இமயத்தை உண்டாக்க வா..என்று தொடங்கும் மற்றொரு பாடல். வைரமுத்துவின் இந்த வரிகளை ஏ.ஆர்.ரஹ்மானே பாடியுள்ளார். அவருடைய மேஜிக் வாய்ஸில் இந்த பாட்டை கேட்கும்போது நம்மை மறந்து பாட்டில் லயித்துவிடுவோம். அந்த அளவுக்கு ரஹ்மானின் காந்தக்குரல் நம்மை இழுக்கின்றது. “ஒன்று படு வென்று விடு, உலகில் பெரிதென்று எதுவுமே இல்லை” என்ற வரிகளை ரஹ்மான் பாடும்போது மெய் சிலிர்க்க வைக்கின்றது.

4.மோனோ கோஸ்லினா என்று தொடங்கும் மதன் கார்க்கி பாடல். மனோ, நீத்தி மோகன், தன்வி ஷா ஆகியோர் பாடிய பாடல். “அம்பு வச்சு மீன் பிடிச்ச என்னோட கண்ணோட அம்பாலதானே என்னை குடிச்ச” என்ற வரிகளின் மூலம் தந்தைக்கு தனயன் எந்த விதத்திலும் குறைவில்லை என்பதை மதன் கார்க்கி நிரூபித்துவிட்டார்.

5. “உண்மை ஒருநாள் வெல்லும்” என்று தொடங்கும் வைரமுத்து பாடல். ஹரிச்சந்திரனின் சாப்ட்டான வாய்ஸில் மிக அருமையாக வந்துள்ள ஒரு பாடல். “பொய்கள் புயல்போல் வீசும், ஆனால் உண்மை மெதுவாய் பேசும். அன்று நீயே வாழ்வில் வெல்வாய். ராமனும் அழுதான், தர்மனும் அழுதான். நீயோ அழவில்லை, உனக்கோ அழிவில்லை”. ரஜினிக்கு வைரமுத்து கொடுத்த பாமாலை வரிகள் இவை.

லிங்காவில் ரஜினிக்கு சம்பளம் ரூ 60 கோடி… ஆசியாவில் அதிக சம்பளம் பெறும் நடிகர்!

லிங்காவில் ரஜினிக்கு சம்பளம் ரூ 60 கோடி… ஆசியாவில் அதிக சம்பளம் பெறும் நடிகர்! 

லிங்கா படத்தில் ரஜினிகாந்துக்கு சம்பளமாக ரூ 60 கோடி தரப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் இந்தியாவிலேயே அதிக சம்பளம் பெறும் நடிகர் என்ற முதலிடத்தைத் தக்க வைத்துக் கொண்டுள்ளார் ரஜினி. மேலும் ஆசிய அளவில் சம்பளமாக இவ்வளவு தொகை பெறும் முதல் நடிகரும் ரஜினிதான்.

பெரிய பட்ஜெட்

லிங்கா படம் ரூ 100 கோடிக்கும் அதிகமான பட்ஜெட்டில் உருவாகியுள்ளது. படத்தின் உலகளாவிய வெளியீட்டு உரிமை ரூ 165 கோடிக்கு விற்கப்பட்டுள்ளது. இசை வெளியீட்டு உரிமைக்கு ரூ 7 கோடி தரப்பட்டுள்ளது.

தொலைக்காட்சி

பெரும் தொகைக்கு இப்படத்தின் தொலைக்காட்சி உரிமை விலை பேசப்பட்டு வருகிறது.

ரஜினி அண்ணன்

படத்தை முனிரத்னா வழங்க ராக்லைன் வெங்கடேஷ் தயாரித்துள்ளார். இதில் இன்னொரு தயாரிப்பாளராக ரஜினியின் அண்ணன் சத்யநாராயணா உள்ளார். படத்தின் லாபத்தில் அவருக்கும் ஒரு பங்கு தரப்படுகிறது.

சம்பளம் இப்படத்தில்

ரஜினிக்கு சம்பளமாக ரூ 60 கோடி தரப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. வருமான வரி செலுத்தப்பட்ட பிறகு, காசோலை மூலம் இந்தத் தொகை தரப்பட்டுள்ளது.

இந்தியாவில்

இந்திய சினிமாவில் இந்த அளவு சம்பளம் பெறும் ஒரே நடிகர் ரஜினிதான். சந்திரமுகி படத்திலிருந்து இந்த சாதனையை அவர் தக்கவைத்துக் கொண்டுள்ளார்.

ஜாக்கி சான்

ஆசிய அளவிலும் அதிக சம்பளம் பெறும் நடிகர் ரஜினிதான். ஜாக்கி சான் பெரும்பாலும் வேறு தயாரிப்பு நிறுவனங்களின் படங்களில் நடிப்பதில்லை என்பதால் அவரது வருவாய் சம்பளமாகக் கொள்ள முடியாது.