TwitterFacebook

கே.எஸ்.ரவிகுமாரிடம் ரஜினி வாங்கிய சத்தியம்

Wednesday 17 Dec 2014

சமீபத்தில் சரத்குமார் நடித்த ‘சண்டமாருதம்’ பாடல் மற்றும் டிரைலர் வெளியிட்டு விழா சென்னையில் நடந்தது. இந்த விழாவில் பேசிய ராதாரவி லிங்கா படத்தை மோசமான சமூக வலைத்தளங்களில் விமர்சனம் செய்தவர்களை ஆபாச வார்த்தைகள் கலந்து ஆவேசமாக தாக்கி பேசினார். இதனால் விழாவில் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் அவர் லிங்கா படத்தின் படப்பிடிப்பின்போது கே.எஸ்.ரவிகுமார் பட்ட கஷ்டங்களையும் மேடையில் எடுத்துக்கூறினார். நூற்றுக்கணக்கான துணை நடிகர்களை கட்டி மேய்த்து ஒரு படம் எடுப்பது என்பது சாதாரண விஷயமில்லை. கே.எஸ்.ரவிகுமார் சில சமயம் டென்ஷனில் கெட்ட வார்த்தைகளில் கூட திட்டுவார். இந்த படத்தின் படப்பிடிப்பு கோவிலில் நடந்தபோது ரஜினி சார், கே.எஸ்.ரவிகுமாரிடம் ‘இந்த இடத்தில் படப்பிடிப்பு நடக்கும்போது கெட்ட வார்த்தை பேசக்கூடாது என சத்தியம் வாங்கியதாகவும் அவர் தெரிவித்தார். மேலும் கதை திருட்டு என்ற பெயரில் பொய்யாக வழக்கு போடுபவர்களையும் ராதாரவி விட்டு வைக்கவில்லை.

மேலும் சண்டமாருதம் படக்குழுவினர்களுக்கு குறிப்பாக சரத்குமாருக்கு வாழ்த்து கூறிய ராதாரவி, சரத்குமாருக்கு தன்னைவிட ஒருசில வயதுதான் குறைவு என்றும் ஆனால் இவர் இன்னும் 25 வயது இளைஞனைப்போல உடம்பை சூப்பராக வைத்திருப்பதாகவும் அதற்கு பாராட்டுவதாகவும் கூறினார்.

பல கோடி கேட்டு மிரட்டல் , எனது வளர்ச்சியை தடுக்க சதி நடிகர் விஜய் சேதுபதி அறிக்கை

நடிகர் விஜய்சேதுபதி வெளியிட்டுள்ள அறிக் கையில் கூறி இருப்பதாவது:-

தமிழ் திரையுலக பத் திரிக்கை நண்பர்களுக்கும், தமிழ் திரை உலகிற்கும் எனக்கு ஆதரவு அளித்து வரும் தமிழ் ரசிகர்களுக்கும் எனது அன்பான வணக் கம்.
ஆர்.கே.சுரேசின் ஸ்டுடியோ 9 என்ற நிறு வனத்தில் ‘வசந்தகுமாரன்’ என்ற திரை படத்தில் நான் நடிக்க ஒப்பந்தம் செய்து கொண்டது உண்மையே. ஆனால் ஆர்.கே.சுரேசின் தவறு தலான நடவடிக்கைளின் காரணமாகவும் அவரின் தகாத வார்த்தைகளின் காரணமாகவும்  நான் வசந்தகுமாரன் திரைப் படத்திலிருந்து கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பே விலகி கொள்வதாகவும் நான் வாங்கிய ரூ. 9 லட்சம் அட்வான்ஸ் தொகையை வட்டியுடன் சேர்த்து தருவ தாகவும் அன்றே கூறி விட்டேன்.

ஆனால் ஆர்.கே.சுரேஷ் என்னிடம் பல கோடி கேட்டு தொடர்ந்து தொந்தரவு செய்தார். மேலும் சில மர்ம நபர்கள் மூலம் எனக்கு மிரட்டல்களும் வந்து கொண்டு இருந்தன. இதை தொடர்ந்து நடிகர் சங்க தலைவர் சரத்குமாரிடம் புகார் அளித்தேன்.அதன் பிறகு தயாரிப்பாளர் சங்கம், நடிகர் சங்கம் உள்ளிட்ட நிர்வாகிகள் முன்னிலையில் பேச்சு வார்த்தை நடந்த போது என்னுடைய தரப்பு நியாயங்களை எடுத்துரைத்து வசந்தகுமாரன் திரைப் படத்தில் இருந்து முழுவதுமாக என்னை விடுவிக்குமாறு கேட்டுக் கொண்டேன்.

இதே கருத்தை வலியுறுத்தி நடிகர் சங்கத்தில் மீண்டும் ஒரு புகார் கடிதம் ஒன்றையும் கொடுத்துள்ளேன்.

இந்நிலையில் இன்றைய தினம் நாளிதழ் ஒன்றில் நான் நடிப்ப தாக வசந்தகுமாரன் திரைப் படத்தின் விளம்பரம் வந்துள்ளதை கண்டு அதிர்ச்சி அடைந்தேன்.இது போன்ற செயல்கள் எனது வளர்ச்சியை தடுக்கும் நோக்கத்துடனே திட்டமிட்டு செயல்படுத்தப்படுவதாக அறிகிறேன். நான் தற்போது எஸ்.பி.ஜனநாதன் இயக்கத் தில் ’புறம்போக்கு திரைப் படத்தின் இறுதி கட்ட படப் பிடிப்பில் நடித்துக் கொண்டிருக்கிறேன்.

இதை தொடர்ந்து நடிகர் தனுஷ் தயாரிப்பில் ’நானும் ரவுடிதான்’ என்ற திரைப் படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்ள இருக் கிறேன். இந்நிலையில் வசந்தகு மாரன் திரைப்படம் ஆரம் பிக்கப்பட உள்ளதாக வந்துள்ள செய்தியை கண்டு மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளேன்.

இது போன்ற செயல்களில் ஸ்டுடியோ 9 நிறுவனத்தின் உரிமையாளர் ஆர்.கே.சுரேஷ் தொடர்ந்து ஈடுபடுவாரேயானால் அவர் மீது சட்ட ரீதியாகவும் நட வடிக்கை எடுப்பேன் என் பதை தெரிவித்துக் கொள் கிறேன். இப்பிரச்சினையில் நடிகர் சங்கமும், தயாரிப் பாளர் சங்கமும் என்னை பாதுகாக்கும் என்ற நம்பிக் கையுடன் காத்துக் கொண்டு இருக்கிறேன்.
இவ்வாறு நடிகர் விஜய் சேதுபதி அதில் கூறியுள் ளார்.

சீக்கிரம் திருமணம் செய்து கொள்வேன் – சமந்தா அதிரடி…

Monday, 20 Oct 2014

நடிகை சமந்தா – சித்தார்த் இருவரும் காதலிக்கிறார்கள் என கடந்த சில ஆண்டுகளாகவே ஒரு வதந்தி இருந்து வருகிறது. ஆனால், இருவருமே அதை மறுத்து வருகிறார்கள். கடந்த வருடம் கூட இருவரும் ஒன்றாக காளஹஸ்தி கோயிலுக்குச் சென்று பூஜை நடத்தியதும் பரபரப்பாக பேசப்பட்டது. அதன் பின் இருவரையும் ஒன்றாகப் பார்ப்பது அரிதாக இருந்தது.

இதனிடையே சித்தார்த் நடிக்கும் எனக்குள் ஒருவன் படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு சமந்தாவும் வந்திருந்தார். அதன் பின் மீண்டும் அவர்களைப் பற்றிய பேச்சுகள் பரவ ஆரம்பித்தன.சமந்தா நடித்துள்ள கத்தி படம் இன்னும் சில நாட்களில் வெளியாக உள்ளது. தெலுங்கில் முன்னணி நடிகையாக விளங்கி வரும் இவர் இந்தப் படம் மூலம் தமிழிலும் முன்னணி இடத்தைப் பிடிக்க வேண்டும் என்ற ஆவலில் இருக்கிறார்.
சமீபத்தில் ஒரு தொலைக்காட்சிப் பேட்டி ஒன்றில் சமந்தா சீக்கிரமே திருமணம் செய்து கொண்டு, குழந்தையும் பெற்றுக் கொள்வேன் எனக் கூறி அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சியைக் கொடுத்திருக்கிறார். “இன்னும் ஒரு சில ஆண்டுகள் மட்டுமே நான் சினிமாவில் நடிப்பேன். அநேகமாக அடுத்த சில ஆண்டுகளுக்குள் திருமணம் செய்து கொள்வேன். அதன் பின் சீக்கிரமாகவே குழந்தையும் பெற்றுக் கொள்வேன். அதிகபட்சமாக அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள் குழந்தை பெற விரும்புகிறேன். எனக்கு 60 வயது ஆகும் போது என்னுடைய குழந்தைக்கு 15 வயது ஆக இருப்பதை நான் விரும்பவில்லை. சீக்கிரமே சினிமாவில் நடிப்பதை விட்டுவிடுவேன், ” என்றும் சொல்லியிருக்கிறார்.
வாழ்க்கையின் அர்த்தத்தை சமந்தா நன்றாகவே உணர்ந்திருக்கிறார்.

அமலாபால் படத்தில் ரம்யா நம்பீசன்

Monday 22 Sep 2014

பிரபல மலையாள இயக்குனர் ஜோஷி இயக்கும் படம் லை ஓ லைலா. இதில் மோகன்லால், அமலா பால் நடிக்கிறார்கள். சத்யராஜ் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். இதில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார் ரம்யா நம்பீசன்.

இதுகுறித்து அவர் கூறியதாவது: ஜோஷி சாரின் படத்தில் நடிக்க எல்லோருக்குமே ஆசை இருக்கும். லைலா ஓ லைலா கதை எனக்குத் தெரியும். கதையின் திருப்புமுனையாக ஒரு கேரக்டர் வரும். அந்த கேரக்டரில் யார் நடிப்பார்கள் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன். எதிர்பாராத வகையில் எனக்கே அந்த வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இது எனக்கு புது அனுபவமாக இருக்கிறது.

தமிழில் நான் நடித்த ரெண்டாவது படம் ரிலீசாக இருக்கிறது. நான்கு போலீசும் நல்லா இருந்த ஊரும், முறியடி படங்களில் நடித்து வருகிறேன். இதுதவிர கன்னடத்தில் ஸ்டைல் கிங் என்ற படத்தின் மூலம் அறிமுகமாகியிருக்கிறேன். என்கிறார் ரம்யா நம்பீசன்.

‘ஐ’ பட விழாவில் ஆர்னால்ட்டுன் மேடையேறுப் போகும் நடிகர்கள்! 

Wednesday 10 Sep 2014

‘ஐ’ பட இசை வெளியீடு பற்றித்தான் தற்போது தென்னிந்தியத் திரையுலகமே பேசிக் கொண்டிருக்கிறது. எப்படியாவது விழாவில் கலந்து கொள்ள வேண்டுமென்று பல முக்கியப் பிரமுகர்களும் தயாரிப்பு நிறுவனத்தை அணுகி வருகிறார்களாம்.

நட்சத்திரங்கள் பலருக்கும் அந்த ஆசை இருக்கிறதாம். அதை வெளியில் சொல்லாமல் அவர்களது ஆட்கள் மூலம் தூது அனுப்பிக் கொண்டிருப்பதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன. அதிலும் ஆர்னால்ட்டுடன் மேடையேறும் வாய்ப்பு கிடைக்காதா என்றும் சிலர் ஆசையில் இருப்பதாகவும் கேள்வி. அப்படி மேடையில் அமரும் பட்சத்தில் உலக அளவில் சரியான பப்ளிசிட்டி கிடைக்க வாய்ப்பு உள்ளதே அதற்குக் காரணம்.
ஜாக்கிசான் கலந்து கொண்ட ‘தசாவதாரம்’ இசை விழாவில் கூட ஒரு சில நடிகர்களே மேடையேற்றப்பட்டனர். ஆர்னால்ட் பல வருடங்களாகவே ஹாலிவுட்டின் புகழ் பெற்ற நடிகராக விளங்கி வருவதால் ‘ஐ’ படத்தின் மீதான சர்வதேச கவனம் கண்டிப்பாக அதிகமாகவே இருக்கும். தமிழ்த் திரையுலக நட்சத்திரங்களைப் பொறுத்தவரை ரஜினிகாந்த், கமல்ஹாசன் மேடையில் அமரப் போவது உறுதியாகிவிட்டதாம். மலையாளத் திரையுலகத்தில் இருந்து மம்முட்டி கண்டிப்பாக வருவார் என்கிறார்கள். அதே போல் தெலுங்குத் திரையுலகில் இருந்து மகேஷ் பாபு வருவார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. கன்னடத் திரையுலகில் இருந்து யார் வருவார்கள் என்பது தெரியவில்லை. ஹிந்தித் திரையுலகத்தைச் சேர்ந்த வேறு யாரும் வருகிறார்களா என்பதும் முடிவாகத் தெரியவில்லையாம். அநேகமாக அனைத்து திரையுகிலிருந்தும் பிரபலமானவர்கள் மேடையேற்றப்படலாம் என்கிறார்கள்.
தயாரிப்பு நிறுவனத்திடமிருந்து விழா பற்றிய எந்தவிதமான நிகழ்ச்சி நிரலும் இன்னும் வெளியிடப்படவில்லை. ஒரு சில நாட்களில் அது பற்றிய முழு விவரம் வெளிவந்துவிடும் என்கிறார்கள்.

தீபிகா படுகோனேவின் வசனத்தை கட் செய்த சென்சார் போர்டு

Wednesday 28 Wednesday 2014

பாலிவுட் இயக்குனர் ஹோமி அட்ஜானியா இயக்கி விரைவில் வெளிவர உள்ள ஃபைண்டிங் ஃபன்னி (Finding Fanny) என்ற திரைபடத்தில் தீபிகா படுகோனே கன்னித்தன்மை குறித்து பேசும் ஒரு வசனத்தை சென்சார் போர்டு நீக்கியுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த திரைப்படத்தில் நாயகி தீபிகா படுகோனே, ஹீரோ அர்ஜூன் கபூருடன் பேசும் ஒரு வசனத்தில், “நான் ஒரு கன்னித்தன்மையுள்ள பெண்” என்று பேசும் வசனத்தில் கன்னித்தன்மை என்ற வார்த்தையை மியூட் செய்ய சென்சார் போர்டு அறிவுறுத்தியுள்ளது. இதனால் இயக்குனர் கடும் அதிருப்தியில் உள்ளார்.
ஏற்கனவே ஷாருக்கான் நடித்த தில்சே படத்தில் ப்ரீத்தி ஜிந்தா மற்றும், 2 ஸ்டேட்ஸ் படத்தில் அலியா பட் ஆகியோர் பேசிய வசனம்தான் இது என்றும், அந்த படத்தில் இடம்பெற்ற நிலையில் தன்னுடைய படத்தில் மட்டும் அந்த வசனத்திற்கு தடை ஏன் என்றும் இயக்குனர் தரப்பில் எடுத்துரைத்த வாதத்தை சென்சார் அதிகாரிகள் ஏற்றுக்கொள்ளவில்லை. இந்த படத்தில் விர்ஜின் என்ற வார்த்தை ஆபாசத்தை குறிப்பதாகவும், அதனால் அந்த வசனத்தை மியூட் செய்துவிட்டதாகவும் சென்சார் அதிகாரிகள் விளக்கம் கொடுத்துள்ளனர்.
மேட்டாக் பிலிம்ஸ் மற்றும் பாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் தயாரித்துள்ள இந்த திரைப்படம் வரும் செப்டம்பர் மாதம் 12ஆம் தேதி வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Nine interesting cameos in ‘Shamitabh’

Friday 22.08.2014

Director R.Balki’s next, ‘Shamitabh’ is already having a stellar star cast of Amitabh Bachchan, Dhanush and Akshara Haasan. Now the director has managed to make seven Bollywood achievers to act in his film.

While it is quite common for actors that too in Bollywood to make cameo appearances in the film that have even their rivals in lead characters, Balaki has made six of his director friends to appear in the film. Raju Hirani, Gauri Shinde, Karan Johar, Mahesh Bhatt, Rakeysh Omprakash Mehra and Anurag Basu are the directors who have acted in the film. Apart from this ace lyricist Javed Akthar and Producers Boney Kapoor and Ekta Kapoor will also be appearing in the film. Contrary to the Bollywood custom they won’t be dancing to a group song instead they play themselves and speak about stardom which will be an important segment of the film.

‘Shamitabh’ is the third film of Balki after ‘Cheeni Kum’ and ‘Pa’ For all the three films the music director and cinematographer are our maestro Ilaiyaraja and P.C.Sreeram respectively.

Dhanshika clarifies about her future projects

Wednesday 30.04.2014

Tall and Dusky beaty Dhanshika has sent a press release in which she has opened up about her fitness secret, film career and also upcoming projects.

The ‘Paradesi’ actress has said ” I had waited for meaty roles and had a hit and miss session until now in terms of the films I had worked . My commitment never the less was the same. I am sure my good days are ahead. I am an ardent devotee of Baba and Vaishanavi devi . Regular visits to these shrines infuses courage and confidence in me spiritually and morally. I expertise in Yoga and meditation .My brief stint as an athlete , doubled with my  learning experience of ‘Silambam ‘ with Pandian master  keeps me physically fit and attractive .I  want to emulate my favorite actress Simran and i am sure of succeeding as an actress with Performance and  Personality. ‘

Vizhithiru with Meera Kathiravan directed by Meera Kathiravan   Kaathaadi  Directed by  Kalyan , and  ‘ Thiranthidu Seesay ‘  directed by Muthu are the future projects of Dhanshika mentioned in the press release.

This makes clear that Dhanshika is not a part of Ajith’s 55th film directed by Gautham Menon, contrary to the reports suggesting that she has been roped in to play a negative character in the film. Or at least she is yet to be confirmed for the film.

Dhanshika’s projects in hand, can be expected to pour in fortunes and place her at the top position among heroines.

Vishal gets injured

Tuesday 29 Apr 2014

Actor Vishal who has started acting in his third production venture ‘Poojai’ directed by Hari has been severely injured while shooting a stunt scene recently in Chennai.

The first schedule of this Vishal-Sruthi Haasan starrer is currently happening in Chennai. Sruthi Haasan’s part in this schedule has been completed and she has left to Mumbai last week to concentrate on other projects. Following that Hari has been shooting a stunt sequence with Vishal in a private studio at Saligramam. A grand set costing one crore rupees has been erected for this stunt sequence within the studio.

In a particular shot Vishal had to blow a stunt artiste. Since the stunt artiste escaped getting hit, Vishal’s right hand dashed at a metal that was kept behind. Due to this the middle finger in Vishal’s right hand got injured and he had to be rushed to hospital since blood was oozing out. 14 stitches have been administered in the injured finger of Vishal and doctors have advised a week’s rest for the actor cum producer.

Owing to this the ‘Poojai’ shooting was temporarily halted and it is expected to resume in a couple of days.  However Vishal will return to the sets only after two weeks as reported by sources.

We at Indiaglitz wish the ‘Pandiyanadu’ actor a speedy recovery.